முன்னாள் விற்பனை அதிகாரி தொடர்பான முறைப்பாடை நியாயப்படுத்த முடியவில்லை: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Report Print Ajith Ajith in சமூகம்
47Shares

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவருக்கு எதிராக இந்தியாவின் புதுடில்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பதில் வழங்கியுள்ளது.

விற்பனை அதிகாரியான பெண் ஒருவருக்கு குறித்த இலங்கையின் அதிகாரி பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டார் என்றும் முறைப்பாட்டை அடுத்து பெண் கொச்சினுக்கு இடமாற்றப்பட்டார் என்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இலங்கையின் முன்னாள் மேலதிகாரியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருக்கான தண்டனை நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தமுடியாது என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பாலியல் துன்புறுத்தல் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டு அதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதனையடுத்து குறித்த பெண் பழிவாங்கல் அடிப்படையிலேயே கொச்சினுக்கு இடமாற்றப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் நியாயப்படுத்தப்படவில்லை. நிறுவனத்தின் தேவைக்கருதியே அவர் கொச்சினுக்கு இடமாற்றப்பட்டார்.

இந்தநிலையில் அவர் கொச்சினில் பணியாற்ற மறுத்தமையை அடுத்து பணிநீக்கம் செய்யப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.