கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர்கள் 12 பேர் கைது...

Report Print Ajith Ajith in சமூகம்
209Shares

கொழும்பின் புறநகர் மொரட்டுவ பகுதியில் இன்று அதிக போக்குவரத்தின் போது சாலைகளில் பிச்சை எடுப்பதன் மூலம் வாகன இயக்கத்திற்கு இடையூறு விளைவித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் பத்து ஆண்கள் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் போலியான அங்கக்குறைபாடுகள் உள்ளவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடும் போக்குவரத்தின்போது கூட, பிச்சை எடுப்போர் வாகனங்களின் ஜன்னல்களை தட்டி பிச்சை கோரி வந்தனர் இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்ற உத்தரவின் பின்னர் பிச்சைக்காரர்கள் ரிதீகம மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுபெத்தை, ராவதவத்த, கொரலவெல்ல மற்றும் மொரட்டுவ பகுதிகளிலேயே பிச்சை எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும் அவர்கள் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அல்ல என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் கை, கால்களில் கட்டுகள் இருந்தன, ஆனால் காயங்கள் இருக்கவில்லை.

விசாரணைகளின்போது சிலர் தாம் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.