இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரி குறித்து வெளியாகியுள்ள தகவல்!

Report Print Murali Murali in சமூகம்
806Shares

இந்தியாவின் தமிழ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரியை மேலதிக விசாரணைகளுக்காக கோயம்புத்தூர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டிற்கு தப்பிச் சென்ற நிலையிலேயே, குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

பிரதீப் குமார பண்டார எனும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு இராமநாதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் அங்கொட லொக்கா தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியே இந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அண்மையில் சபுகஸ்கந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 23 கிலோ கிராம் ஹெரோயின் குறித்த நபரினால் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.