ஆறு மணி நேரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொடி லசி

Report Print Ajith Ajith in சமூகம்
88Shares

பாதாள உலக குழு உறுப்பினரான பொடி லசி என்ற ஜனித் மதுஷங்க இன்று குற்றப்புலனாய்வுத்துறையினரால் சுமார் 6 மணிநேரமாக விசாரணை செய்யப்பட்டார்.

பூஸா சிறைச்சாலையில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முக்கியஸ்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் பொடி லசி நேற்று காலி நீதிமன்றத்தினால் இரண்டாவது பிரதிவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் அவரை செப்டம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று அங்கு சென்ற குற்றப்புலனாய்வு துறையினர் பொடி லசியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவுசெய்தனர்.