புதையல் தோண்டிய போது வசமாக சிக்கிய நபர்கள்!

Report Print Murali Murali in சமூகம்
138Shares

மொனராகல பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவல்களின் படி, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மாலிகாவில நியதெல பகுதியில் புதைய தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டும் போது சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பல உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பல நாட்களாக ஒரு பெரிய குழி தோண்டி, நீர்ப்பம்பியின் உதவியுடன் தண்ணீரை அகற்றி வந்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் 35 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் மற்றும் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஒக்கம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.