கொழும்பில் மனித உடலுக்கு பொருத்தமற்ற கிறீம்கள் விற்பனை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு, புறக்கோட்டையில் மனித உடலுக்கு பொருத்தமற்ற கிறீம் தொகை ஒன்று 8 கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வாசனை திரவியம் மற்றும் கிறீம் தொகையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கிறீம்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய கைப்பற்றப்பட்ட வாசனை திரவியம் மற்றும் கிறீம்கள் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான எந்தவொரு ஆவணங்களும் காணப்படவில்லை.

இந்த இரண்டு பொருட்களினதும் உற்பத்தி திகதி, காலாவதியாகும் திகதி மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தகவல்கள் காணப்படவில்லை. அதில் புரியாத மொழியில் ஏதோ சில விடயங்கள் மாத்திரம் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த வாசனை திரவியம் மற்றும் கிறீம்கள் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும். இதனால் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.