சாரதிகளின் செயற்பாட்டால் கடும் அதிருப்தியில் பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு சட்டத்தை பலரும் பின்பற்றுவதில்லை என பொலிஸார் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கடந்த சில தினங்களாக வீதி ஒழுங்கு சட்டம் பொலிஸாரினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் முறையாக கடைப்பிடிக்கப்பட்ட போதும், கொழும்பின் முக்கியமான பகுதிகளில் சாரதிகள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு சில வாகன சாரதிகள் பொறுப்புடன் செயற்படுகின்ற போதும் பலரும் சட்டத்தை மீறிச் செயற்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னங்கோணின் எண்ணக்கருவுக்கு அமைய வீதி ஒழுங்கு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.