கொழும்பில் பெருந்தொகை பணத்தில் வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்? பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பல்வேறு வீட்டுத்தொகுதிகள் மற்றும் கட்டடங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் வீடுகள், கட்டடங்களை கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சிலர் பணியிடங்களில் மறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதன்போது மேற்குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

குறித்த கூட்டம் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோணின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.