கண்ணகிநகர் அம்பிகை விளையாட்டுக்கழகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றிய சிறீதரன் எம்.பி

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி - கண்ணகிநகர் அம்பிகை விளையாட்டுக்கழகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நிறைவேற்றி வைத்துள்ளார்.

நேற்றையதினம் சிறீதரன் கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டுக்கழக மைதானத்திற்கு விளையாட்டுக்கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போதே கண்ணகி நகர் விளையாட்டு கழகத்தினர் முன்வைத்த பிரதான கோரிக்கையான மின்னொளி பொருத்துவற்கான தூண்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினர், கழகத்தின் தலைவர் குமரன், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரிடம் கையளித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன், தமிழரசுக் கட்சியின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் தீபன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.