மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர் மட்டம் உயர்வு! வான்கதவுகள் திறப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர் மட்டம் உயர்வடைந்ததால் நேற்றிரவு முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.