மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் 560 பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலில் போதைப்பொருளுடன் 560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை நடத்தப்பட்ட இந்த தேடுதலில் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 137 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.