வவுனியா நகரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் பாலியல் தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரியவந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.