தேங்காய் விலையை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் தற்போது தேங்காயின் விலைகள் துரிதமாக அதிகரித்து வரும் நிலையில் தேங்காய் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக தேங்காய் அறுவடை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக கைவிடப்பட்ட வயல்கள் மற்றும் அரச காணிகளில் தென்னையை பயிரிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது சந்தைகளில் ஒரு தேங்காய் 85 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

நாட்டில் தேங்காய், சீனி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.