இலங்கைக்கு 53 சீனர்களை அழைத்து வந்த விமானம்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டப்பணிகளில் சேவையாற்றி வரும் சீனப் பிரஜைகளை ஏற்றிய சைனா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றும் 53 சீனப் பிரஜைகள் நேற்றிரவு 7 மணியளவில் இந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விமானம் இலங்கையில் பணியாற்றி வரும் மேலும் 206 சீனப் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு 9.30 அளவில் ஷங்காய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.