மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது

Report Print Ashik in சமூகம்

மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றினுள் வலைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்றிரவு கைப்பற்றியுள்ளதோடு,சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகள் சுமார் 305 கிலோ 400 கிராம் எடை கொண்டது என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆகியோரின், அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருசாந்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் குறித்த மஞ்சள் கட்டிகளை மீட்டுள்ளனர்.

இதன்போது மன்னார் எழுத்தூரை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.