சிலாபத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொரோனா - தாயாருக்கும் பரிசோதனை

Report Print Tamilini in சமூகம்

சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியமை உறுதியாகியுள்ளது.

பின்னர் அவர் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆணமடுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனாகும்.

கடந்த மாதம் 16ம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த குறித்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சிகிச்சைக்காக வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 3 தடவைகள் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

அதற்கமைய தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர் 24ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் திகதி அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அவர் தனது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் தாயார் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளார்.