வவுனியாவில் கிணற்றில் விழுந்து கிடந்த முதலை மற்றும் 12 முதலை குஞ்சுகள்

Report Print Steephen Steephen in சமூகம்

வவுனியா - குருந்துபிட்டி பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த 12 முதலை குஞ்சுகள் மற்றும் முதலையை மீட்ட பிரதேசவாசிகள் அவற்றை காட்டுப் பகுதியில் எடுத்துச் சென்று விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தண்ணீர் தேடி இந்த முதலையும், குஞ்சுகளும் வந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காணி ஒன்றின் உரிமையாளர், காணியில் இருந்த கிணற்றில் விழுந்து கிடந்த முதலை கண்டு பிரதேசவாசிகளுடன் இணைந்து மீட்டுள்ளதுடன் பின்னர் மேலும் 12 முதலை குஞ்சுகளை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.

அருகில் உள்ள குளம் வற்றியுள்ளதால் அங்கு வாழும் முதலைகள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்து கிணற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.