வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக சுற்றுலா விடுதிகளை பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இவர்கள் விசா அனுமதி காலம் முடிந்து அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் அமெரிக்காவின் வொஷிங்டனில் இருந்து கென்யாவின் நைரேபி ஊடாக கென்யா நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்க வந்த இவர்கள் PCR பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இவர்களிடம் விசாரணைகளை நடத்தவுள்ளனர்.