பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

மல்வானை பிரதேசத்தில் பெரிய ஆடம்பர வீட்டை நிர்மாணித்தமை சம்பந்தமாக நிதி சலவையை தடுக்கும் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

வழக்கின் சாட்சியாளரான கட்டட நிர்மாண கலைஞர் முதித் ஜயகொடி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது தரப்பு வாதி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால், அவர் சாட்சியமளிக்க வேறு ஒரு தினத்தை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து சாட்சியமளிக்க வேறு ஒரு தினத்தை வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது.