பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மூன்று இராணுவ சிப்பாய்கள்.

Report Print Vethu Vethu in சமூகம்

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்கமைய மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொஹுவ இராணுவ முகாமில் சேவை செய்யும் மூன்று சிப்பாய்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கொஹுவ ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் வைத்து பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதன் போது பெண்ணின் கணவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் இராணுவ சிப்பாய்கள் மற்றும் கணவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதேச மக்கள், இராணுவ சிப்பாய்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தின் போது மூவரும் கடும் குடிபோதையில் இருந்துள்ளனர். அதற்கமைய குறித்த மூவரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.