ஹட்டன் எரோல் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் வீடொன்று சேதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நிலவும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் எரோல் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளது.

மேற்படி தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ள நிலையில் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

மலைநாட்டில் இன்று காலை வேளையில் கன மழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.