உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்

Report Print Ajith Ajith in சமூகம்

2019, ஏப்ரல் 21இல் நிகழ்ந்த ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அறிவிக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜெயவர்தனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிறந்த நட்பு உறவு இருந்தது. அவர்கள் வழக்கமாக தினமும் ஏழு, எட்டு தொலைபேசி அழைப்புகளை பரிமாறிக்கொண்டதாகவும் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜெயவர்தன தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து இந்த காலகட்டத்தில் ஏதேனும் முக்கியமான விஷயங்களை அவருக்கு அறிவித்து வந்தார்.

இதன் காரணமாக தாமும் சில விஷயங்களை ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி ஜெயவர்தனவிடம் கேட்டுள்ளதாக சாட்சியான பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட உளவுத்துறை தகவல்கள் தொடர்பாக ஜனாதிபதி சிறிசேனவிடம் தினசரி அறிக்கையை சமர்ப்பிக்க அரச புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

பல சந்தர்ப்பங்களில் அரச புலனாய்வு பிரிவு தமக்கு வழங்கிய உளவுத்துறை தகவல்கள் குறித்து ஜனாதிபதி சிறிசேனவிடம் தெரிவிக்க முயற்சித்த போதும், அந்த தகவல் தொடர்பாக நிலந்த ஜெயவர்தன தனக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறிவிடுவார் .

எனவே, நிலந்த ஜெயவர்தன ஒவ்வொரு விடயத்தையும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார் என்பது தெளிவாகிறது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்தார்.