வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்களின் செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள ஆபத்து

Report Print Vethu Vethu in சமூகம்

அஜர்பைஜானில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட சிலர் பிறந்தநாள் விருந்து நடத்தியுள்ளனர்.

தொடம்கொட, பெலபிட்டியாகொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த சிலரே பிறந்த நாள் விருந்தை நடத்தியுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அதில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி அவர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் பிறந்தநாள் விருந்து நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.