சவால்களை முறியடித்து இலக்குகளை அடைவதே எமது பிரதான நோக்கம்! பிரசன்ன ரணவீர

Report Print Mubarak in சமூகம்

பாரம்பரிய கிராமிய கைத்தொழில்களை மேம்படுத்தி, தேசிய சந்தைக்கும் சர்வதேச சந்தைக்கும் ஏற்றாற்போல உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அன்னிய செலாவணியை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்ர்துள்ளார்.

திருகோணமலையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இம்முறை அவசியமான துறைகளை இனங்கண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் இலக்குகளுடன் கூடிய பொறுப்புக்களை செய்ய வேண்டியுள்ளது. சவால்களை முறியடித்து எட்ட வேண்டிய இலக்குகளை அடைவதே பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக எமக்கே உரித்தான உற்பத்திப் பொருட்களுக்கு பெறுமானத்தை வழங்கி, தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களை வலுப்படுத்துவது எமது அமைச்சின் பொறுப்பாகும்.

கிராமிய கைத்தொழிலை மேம்படுத்தி, அவசியமற்ற இறக்குமதிகளை தடைசெய்து, உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தவுள்ளோம்.

இன, மத, மொழி வேறுபாடுகளின்றி கிராமியக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை வழங்கி தங்களை மேம்படுத்தும் பொறுப்பை எமது அமைச்சு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.