கொரோனா வைரஸ் : இலங்கையின் தற்போதைய நிலவரம் என்ன?

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 10 பேர் இன்று குணமாகி வீடு திரும்பியதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 05 பேரும், வெலிகந்தயில் சிகிச்சை பெற்ற ஒருவரும் இரணவில மருத்துவமனையில் இருந்த 04 பேரும் இதில் அடங்குகின்றனர்.

இதனை அடுத்து இலங்கையில் குணம் பெற்ற கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3,070 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,281 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 198 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.