விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் மரணம்

Report Print Theesan in சமூகம்

கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இராணுவ வீரரை இலகு ரக வாகனம் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் மீட்கப்பட்டு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். சம்பவத்தில் கெப்பிட்டிகொல்லாவ பகுதியை சேர்ந்த அமரசேன (வயது28) என்ற இராணுவ வீரரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது