வவுனியாவில் 60 பேருக்கு பீசிஆர் பரிசோதனை! முடிவுகள் வெளியாகின

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் இருந்து வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்களின் பீசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

வவுனியாவில் இருந்து கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்கள் 60 பேருக்கு நேற்று பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொவிட் - 19 குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட குறித்த பரிசோதனையில் எவருக்கும் கொவிட் - 19 தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.