யாழில் வீடொன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைதாகியுள்ளனர்.

குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குருநகர் பகுதியில் வீடு ஒன்றினை முற்றுகையிட்டு சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 கடல் ஆமையின் பாகங்களும், விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கடல் ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.