வெடுக்குநாறி மலை ஆலயத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

Report Print Dias Dias in சமூகம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் வெடுக்குநாறி மலை ஆலயத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்றையதினம் விஜயம் செய்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள பலவிதமான தடைகளை விதித்து வருகின்றனர்.

இவ்வருடமும் ஆலயத் திருவிழாவை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் தற்போது நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நேற்றையதினம் இடம்பெற்ற நான்காம் நாள் திருவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் அடிவாரத்தில் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.