இரத்தினபுரி நகரில் போதைப்பொருளுடன் பாதாள உலகக்குழு உறுப்பினரொருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இரத்தினபுரி நகரில் போதைப்பொருளுடன் பாதாள உலக முக்கியஸ்தரான குடு துஷாராவின் உதவியாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது அவரிடம் இருந்து 12 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்ததாக நம்பப்படும் 55,250 ரூபா ரொக்கப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்பிட்டி பகுதியில் 480 கிராம் கொக்கேயின் போதைப்பொருளுடன் ஒருவர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.