திருகோணமலை களப்புப்பகுதியில் சிறிய வகை மீன் இனங்களுக்கு படகுகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
70Shares

திருகோணமலை களப்புப்பகுதியில் அதிகரித்துள்ள படகுப்பாவனை காரணமாக அழிவடைந்துவரும் சிறியவகை மீனினங்கள் மற்றும் கண்டல் தாவரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அரசாங்க அதிபரிடம் திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை - வாளையூற்றுப்பகுதியில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பது தொடர்பான அறிவித்தல் பலகையை நேற்றையதினம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவரிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வாளையூற்றுப்பகுதிக்கு விஜயம் செய்த மாவட்ட செயலாளர் அசங்க அபேவர்தன அங்கு களப்பு சுற்றுலாத்துறை நடவடிக்கைகளையும், களப்புச்செயற்பாட்டாளர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் வரோதயநகர் பகுதியில் மேற்கொள்ளப்படும் பனை சார் உற்பத்திகளை பார்வையிட்டுள்ளர்.