மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Report Print Banu in சமூகம்

கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண பொலிஸ் திணைக்களம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 685 சந்தேகநபர்களும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 424 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.