யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞரொருவர் பலி

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று காலை எட்டு மணியளவில் புகையிரத்தில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புகையிரத ஊழியர்களால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.