77.3 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுவதற்காக எடுத்துவரப்பட்ட 77.3 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா நேற்று கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு கையடக்க தொலைபேசிகள், படகு மற்றும் 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.