வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கே.கே.மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் தீர்க்கப்படாத முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.