மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை சேர்ந்த 22 வயதுடைய நாகராசா சதீஸ் என்பவரே பலியாகியுள்ளார்.

மேலும், மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய எஸ்.சுபேந்திரன், 18 வயதுடைய மகேஸ்வரன் தவசீலன் மற்றும் கருணாகரன் தனுசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.