யாழ்.கொழும்புத்துறை பகுதியில் 18 வயது யுவதியொருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 185 மில்லி கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து யாழ், கொழும்புத்துறை பகுதியில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.