பயிற்சி முகாமில் பங்கேற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா அறிகுறி

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக திறன் பயிற்சி முகாமில் பங்கேற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 27 பேரில் ஒரு வீரருக்கு கொரோனா போன்ற அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

டாக்காவில் நேற்று ஆரம்பித்த முகாமுக்கு முன்னதாக கிரிக்கெட் சபை நடத்திய கொரோனா சோதனைகளை தொடர்ந்து குறித்த வீரருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் நாளை 22ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் சைஃப் ஹசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமையை அடுத்து அவர் தமது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார்.