சட்டத்தை மீறும் வாகன ஓட்டுநர்களை புகைப்படம் எடுக்கும் பொலிஸார்

Report Print Ajith Ajith in சமூகம்
60Shares

மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் வாகன ஓட்டுநர்களை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான காவல்துறையினர் வெவ்வேறு இடங்களில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை மேல் மாகாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் ஓட்டுநர்களின் புகைப்படங்கள் வார இறுதி நாட்களில் விழிப்புணர்வு திட்டத்திற்கு வரவழைக்கப்படும்போது அவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

இதனால் ஓட்டுநர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து அவற்றை சரிசெய்ய முடியும் என்று தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்குகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவோ அல்லது நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வீதி சட்டம் குறித்து கல்வி கற்பிக்கவும், சுய புரிதல் மூலம் அவர்களை ஒழுங்குபடுத்தவும் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.