துணை பொலிஸ் அதிபர் பதவிக்கு பெண் பொலிஸ் அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக துணை பொலிஸ் அதிபர் பதவிக்கு ஒரு பெண் அதிகாரியை நியமிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, செயல் பொலிஸ்மா அதிபரை கோரியுள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு செயல் பொலிஸ் மா அதிபரிடம் இருந்து பரிந்துரைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தேசிய பொலிஸ் செயலாளர் நிஷாந்தா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துடன் இணைக்கப்பட்ட எஸ்.எஸ்.பி பிம்சானி ஜாசிங்ஹராச்சி பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இருந்து பெண் பொலிஸ் துணை அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரைக் காலத்தில் இலங்கையின் பொலிஸ் துறையில் உயர் பதவியை வகித்த முதல் பெண் அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பிரமிளா திவாகரா ஆவார்.

இவர் ஏற்கனவே பதவியில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.