சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் இருவர் தடுத்து வைப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பெரிய அளவிலான மோசடி தொடர்பாக இரண்டு பேரை குற்றவியல் புலனாய்வு துறை சந்தேகத்தில் தடுத்து வைத்துள்ளது.

2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டில் 56 மில்லியன் டொலர்கள் சதோசவில் மோசடி செய்யப்பட்டமையை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இது தொடர்பான ஆவணங்களை காவல்துறையினர் இந்த வருட ஆரம்பத்தில் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.