கொரோனா தொற்று:இலங்கையின் தற்போதைய நிலவரம்!

Report Print Rakesh in சமூகம்

இலங்கையில் இன்று மட்டும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களே கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3299ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களில் 177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.