அம்பாறையில் கஞ்சாவுடன் நடமாடிய இளைஞர் கைது

Report Print Varunan in சமூகம்

அமபாறையில் வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனிப் பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடித் திரிவதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 25 வயதுடைய குறித்த இளைஞன் 1 கிலோ 155 கிராம் கஞ்சாவுடன் கைதானார்.

சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்கள் யாவும் மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.