மட்டக்களப்பில் எழுச்சி பெறும் சிங்கள கிராமங்கள்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள கிராமங்கள் பல உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா, புன்னைக்குடா பகுதிகளில் சிங்கள குடும்பங்கள் சில மீள் குடியேறிவருகின்றன.

பாசிக்குடா வீதியில் உள்ள சுற்றுலா பகுதியில் சிங்கள மக்கள் சிலர் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கல்குடா, பாசிக்குடா வீதியில் வலைவாடி என்ற பெயரில் உருவாக்கப்படும் சிங்களக் கிராமத்திற்கான பாடசாலை மற்றும் பௌத்த விகாரை என்பன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் சுமார் 56 குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், இதுவரை அவர்கள் அனைவரும் குடியேற்றப்படவில்லை என்றும், தங்களது கிராமத்திற்கான வீடுகள் மற்றும் வீதிகளை புனரமைப்பு செய்து தர அரச அதிகாரிகள் மறுப்பதாகவும், தங்களது இடங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை பெற முடியாது உள்ளதாக அப்பகுதி சிங்கள மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிங்கள கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் இராணுவத்தில் இருந்து சேவையாற்றி காயமடைந்து ஓய்வு பெற்றவர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.