கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் பலி

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான கட்டான பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அந்த தொழிற்சாலையில் நீண்ட காலமாக சேவை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து ஏற்பட்டமையினால் அங்கிருந்த வெடி மருந்துகள் அனைத்து வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை முழுமையாக தீயில் கருகியுள்ளது.

கட்டான பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.