12 சீனப் பிரஜைகள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
196Shares

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத் தொகுதிக்குள் பணத்தை பந்தயம் வைத்து, கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகளை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சீனப் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்படும் போது, பணம் கணக்கிடும் இயந்திரம், கணனி மற்றும் தொலைக்காட்சி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.