ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்திட்டத்தில் திருப்தியடைந்துள்ளேன்! - பேராயர் மல்கம் ரஞ்சித்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்திட்டத்தில் திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் இந்த நீதி செயற்பாட்டில் நீதி வழங்கப்படும் என்று தான் நம்புவதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இந்த விடயத்தை உண்மையாக கவனித்து வருகின்றமை தமக்கு தெளிவாகத் தெரிவதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரும்வரை ஆணைக்குழு குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடப்போவதில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.