நாகர்கோவில் படுகொலையின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Report Print Ajith Ajith in சமூகம்

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை வான்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும்.

எனினும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.

பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு பாடசாலையில் கல்வி கற்கும். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நாகர்கோவில் கிராமத்திற்கு செல்கின்ற அனைவரும் இராணுவத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் பழைய மாணவனும் மாணவர்களின் பெற்றோருமான ஆ.சுரேஸ்குமார் மட்டும் இந்த நினைவேந்தலுக்கு செல்லவிடாது பருத்தித்துறை காவல்துறையினரால் தடுக்கப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட கிராம மக்கள் எவரும் இந்த நினைவேந்தலில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில், 1995ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கிராமத்தவர்கள் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் மண்டபத்தில் நினைவுரைகளும் இடம்பெற்றன.