நள்ளிரவில் நடந்த பயங்கரம்! இரவோடு இரவாக வெளியேறிய உரிமையாளர் - பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பம்

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் மூவர் உயிரிழக்க காரணமாக இருந்த வீட்டின் முதலாவது உரிமையாளர் முன்னாள் நிலமே என தெரியவந்துள்ளது.

தற்போதைய உரிமையாளராக அனுர லெவ்கே என்பவரே நிலமேயாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த உரிமையாளர் தனது குடும்பத்தினரையும் நாயையும் காப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்னளர்.

அனர்த்தம் குறித்து பாதுகாப்பாக வெளியேறிய உரிமையாளர் கருத்து வெளியிடும் போது,

நாங்கள் டீ.வி பார்த்துவிட்டு தூங்க சென்றோம். அப்போது நேரம் அதிகாலை ஒரு மணியாகும். அதிகாலை திடீரென பாரிய சத்தம் ஒன்று கேட்டது.

சத்தம் எங்கிருந்து வந்ததென எங்களால் உணர முடியாமல் போனது. அப்போது தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் டோர்ச் அடித்து எங்களைக் கூப்பிட்டார்கள்.

அத்துடன் கீழ் உள்ள கொன்கிரீட் தூண் உடைவது போன்று தெரிவதாக கூறினார்கள். இதன்போது தரை நகர்வது போன்று உணர முடிந்தது. இதன் போது வெளியே வாருங்கள் என மகள் கூச்சலிட்டார். மகன் வீட்டில் இருந்து நாயை எடுத்துக் கொண்டார்.

நான் வெளியே செல்லும் போது வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நாயுடன், மகனும் மனைவியும் காரில் ஏறி சற்று தூரமாக சென்று நிறுத்தினோம்.

நாங்கள் காருக்குள் சென்று சிறிது நேரத்தில் கட்டடம் உடைந்து விழுந்து விட்டது. ஏனையவர்களுக்கு தகவல் சொல்ல நேரம் போதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர்கள் வீட்டில் இருந்து செல்லும் போது நேரம் ஒரு மணி எனவும் சம்பவம் 5 மணிக்கே இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உரிமையாளர் நினைத்திருந்தால் இந்த மூன்று உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் எனவும் அந்தப் பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.