இலங்கையில் கொரோனா நிலவரம்...! வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று இரவு வரை 3312ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் 13 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில், 7 பேர் குவைத்தில் இருந்தும், 2 பேர் சவூதி அரேபியாவில் இருந்தும், ஒருவர் இந்தியாவில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்ட ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று கண்டறியப்பட்டது.

இன்று 18 பேர் தொற்றில் இருந்து குணமான நிலையில் தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 3118ஆக உயர்ந்துள்ளது. 181 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.